உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டவை திருடப்பட்ட பணம் அல்ல.. தோமஸ் டெலாரூ நிறுவனத்தின் நோட்டுகள்..- கோட்டஹச்சி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகரான சொத்துக்களை மீட்டெடுக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் திருமதி நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சியினர் தனது சொந்த நாட்டில் அல்லது வேறு நாடுகளில் சட்டவிரோதமாக மக்களின் பணத்தை முதலீடு செய்திருந்தால், அதை மீட்டெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உகாண்டாவில் இருந்து பணத்தைத் திரும்பக் கொண்டுவர விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது தாமஸ் டிலாரோ உகாண்டாவிற்கு சட்டப்பூர்வமாக பணம் அச்சடித்ததைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியும் என அவர் கூறுகிறார்.

முந்தைய அரசாங்கத்தினர் , மக்களின் நிதிச் சொத்துக்களை எந்த நாட்டில் முதலீடு செய்து மறைத்து வைத்தாலும் அவற்றை சட்டப்பூர்வமாக பெறுவதற்கு இருமுறை யோசிக்க தேவையில்லை என அவர் வலியுறுத்துகிறார்.

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை ராஜபக்சவினர் மீண்டும் கொண்டு வந்ததாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.