இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோசமடையும் விரிசல்
கனடாவும் இந்தியாவும் ஒன்று மற்றதன் தூதர்களை நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளன.
கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) விவகாரம் தொடர்பில் இருநாட்டுக்கும் இடையிலான விரிசல் மோசமடைந்துள்ளது.
கனடாவில் உள்ள இந்தியத் தூதரும் ஐந்து பேராளர்களும் கனடிய மக்களுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டிருப்பதாய் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ (Justin Trudeau) கூறினார்.
கனடியக் காவல்துறை அதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
அதைத் தொடர்ந்து இந்தியா கனடாவின் இடைக்காலத் தூதர் உள்பட 5 பேராளர்களை வரும் சனிக்கிழமைக்குள் (19 அக்டோபர்) நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.