முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குக் கனேடியத் தூதுவர் விஜயம்!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார்.
மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனைச் சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அவர் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் குறித்தும், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் அரச அதிபரால் கனேடியத் தூதுவருக்கு விபரிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட தொழில் துறை அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.