அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சந்திப்பு.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என இதன்போது ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிடும் பணத்தின் அளவு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 21 நாள்களுக்குள் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் தமது செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது.