யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருட்டு: மூன்றரைப் பவுணுடன் சந்தேகநபர் ஒருவர் சிக்கினார்.

யாழ்ப்பாணம், நவாலிப் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடிய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று கைது செய்த யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், மேற்படி நபரிடம் இருந்து மூன்றரைப் பவுண் நகையை மீட்டனர்.
கடந்த வாரம் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரைப் பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர.
பிரதான சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.