கொழும்பில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய மயானத்துக்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஓட்டோவில் பயணித்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று இரவு மாத்தறை – கேகனதுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திலும் ஆண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டோவில் பயணித்த நபரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.