இணையக்குற்றத்தில் ஈடுபடுபட்ட 460 க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது.
இலங்கை காவல்துறை அதிகாரிகள் இணையக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை குறிவைத்து நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 460 க்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், அனைத்துலக வங்கிகளை இணைய மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) தகவல் வெளியிட்டது.
அமலாக்க நடவடிக்கைக்கு சீன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து உதவியதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
ஒரு வாரத்திற்கு மேல் நடந்த அதிரடிச் சோதனையில் மோசடிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட கணினிகள், 500 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மோசடியாளர்கள் எவ்வளவு நிதியை ஏமாற்றினார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
அமலாக்க நடவடிக்கைக்காகச் சிறப்பு குழு ஒன்றை சீனாவில் இருந்து வரவைத்துள்ளோம், அவர்கள் இலங்கை காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்தது.
வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
நிதி மோசடிகள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் இலங்கை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தினர். அதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.இலங்கை காவல்துறை அதிகாரிகள் இணையக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை குறிவைத்து நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 230க்கும் மேற்பட்ட சீனக் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், அனைத்துலக வங்கிகளை இணைய மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) தகவல் வெளியிட்டது.
அமலாக்க நடவடிக்கைக்கு சீன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து உதவியதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
ஒரு வாரத்திற்கு மேல் நடந்த அதிரடிச் சோதனையில் மோசடிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட கணினிகள், 500 கைத்தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மோசடியாளர்கள் எவ்வளவு நிதியை ஏமாற்றினார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
அமலாக்க நடவடிக்கைக்காகச் சிறப்பு குழு ஒன்றை சீனாவில் இருந்து வரவைத்துள்ளோம், அவர்கள் இலங்கை காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்தது.
வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.
நிதி மோசடிகள் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் இலங்கை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தினர். அதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.