திசைகாட்டியில் கேட்கும் மருத்துவர்களும், வழக்கறிஞர்களும், ஆசிரியர்களும் தங்கள் பணியைத் தொடர வேண்டும்.. அரசியலை நாங்கள் செய்வோம் – பழனி திகாம்பரம்.

நுவரெலியா மாவட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வேட்பாளர்களில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், தொழில்சார்ந்தவர்கள் , அவர்கள் அரசியலுக்கு அல்ல அவர்களது தொழிலுக்கே உகந்தவர்கள் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இப்படி பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், தமிழ் முற்போக்கு கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமக்கும் ஏனைய வேட்பாளர்களுக்கும் அரசியலில் நல்ல புரிதலும் அனுபவமும் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியைப் பெறும் என தெரிவித்த அவர் , அவரை அரசியலில் இருந்து அகற்ற வாக்காளர்களால் மாத்திரமே முடியும் எனவும் வேறு எவராலும் அவரை அரசியலில் இருந்து நீக்க முடியாது எனவும் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான வி.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார் ஆகியோரும் உரையாற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.