பாதாள உலகம் தொடர்ந்து இயங்குகிறது.. கிரான்ட்பாஸ் நெடுஞ்சாலையில் ஒருவர் சுட்டுக் கொலை.

16ஆம் திகதமாலை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு முன்பாக, முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நபர் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடைய மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்தவர்.
சந்தேகநபர்கள் காரில் வந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.