13 நாட்களில் 41,900 கோடி கடன் வாங்கியுள்ளது அநுரவின் அரசு – ரோஹினி கவிரத்ன.

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான 13 நாட்களில் அரசாங்கம் 41,900 கோடி ரூபா அல்லது 419,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிக் கடன்களாகப் பெற்றுள்ளதாக மாத்தளை மாவட்ட SJB குழுமத்தின் தலைவர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

அரசாங்கம் வரம்பற்ற கடன்களை தொடர்ந்து பெற்று வருகிறது. ஆனால் நாட்டிற்கு உறுதியான நிவாரணம் கிடைக்காது. இன்னும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத நிலுவைத் தொகையை 3000 ரூபாயை செலுத்த முடியவில்லை. அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாது என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது என தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது திருமதி கவிரத்ன தெரிவித்தார்.

⚫️அக்டோபர் 02 – ரூ 142.2 பில்லியன் அல்லது ரூ 14,200 கோடி

⚫️அக்டோபர் 09 – ரூ 85 பில்லியன் அல்லது ரூ 8,500 கோடி

⚫️அக்டோபர் 11 – ரூ 95 பில்லியன் அல்லது ரூ 9,500 கோடி

⚫️அக்டோபர் 15 – அரசாங்கம் 97 பில்லியன் ரூபாய் அல்லது 9,700 கோடி ரூபாய் அளவுக்கு புதிய கடன்களை எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்குள் அரசு ரூ. 3,223 கோடிகள், அதாவது ஒரு மணிநேரத்திற்கு ரூ. 134.29 கோடி கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடனை என்ன செய்கிறீர்கள்? இந்தக் கடன்களின் முதலீடு என்ன? என்பதை அரசு விளக்க வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.