கடல் சீற்றம் ஏற்பட்டு சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி
கடல் சீற்றம் ஏற்பட்டு சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் இதே திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில்தான், நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திடீரென ஊருக்குள் சுனாமி போல் பாய்ந்த கடல் நீரால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். திடீரென கடல் நீர் உள்ளே வந்துள்ளது.
இதன் காரணமாக கரை ஓரம் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு உள்ளே கடல் நீர் புகுந்துள்ளது. வாகனங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கடல் சீற்றத்தை பார்த்தால் ஆரம்ப கட்ட சுனாமி போல இது ஏற்பட்டுள்ளது. அருகே எங்கேயும் நிலநடுக்கம் பதிவாகவில்லை.
அதேபோல் எங்கேயும்.. சுனாமி ஏற்படவில்லை. அப்படி இருக்க அலை ஆக்ரோஷமாக இருந்தது ஏன் என்று தெரியவில்லை. லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை.
இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.