சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற மணி குழுவினர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றனர்.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி ‘மான்’ சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் ஆயர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்தனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை அவர்கள் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்குச் சென்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசத்திடம் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
இதன்போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.