கொலையாளியாக ஒரு இளம் பெண் கைது.

பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, அம்பறலுவ தெற்கில் 58 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற இரண்டாவது சந்தேகநபரான யுவதி, நேற்று பெலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி , களு போவிட்டியான பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.