50000 ரூபா பணம் தருவதாக பகிரப்படும் SMS மோசடி : ஏமாற வேண்டாம்.

அரசாங்கம் பணம் தருவதாகக் கூறி குறுஞ்செய்திகள் மூலம் மக்களின் பணத்தை ஏமாற்றும் மோசடி இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
50000 ரூபாவை அரசாங்கம் வழங்கிறது என போலியான செய்திகள் பகிரப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அந்தச் செய்திகளை மற்றவர்களுடன் அணுகவோ பகிரவோ வேண்டாம் எனவும் , அடையாள அட்டை எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.