மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வாகனங்களை திருப்பி ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 3 பாதுகாப்பு வாகனங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நாட்களில் தங்கல்ல வீட்டில் தங்கியிருப்பதாகவும், கொழும்பு வந்தவுடன் வாகனங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புலனாய்வு அமைப்புகளின் அங்கீகாரத்துடன் இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றனவா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் வருவதை எவராலும் தீர்மானிக்க முடியாது எனவும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை மதிப்பிடாமல் இவ்வாறு செயற்படுவது தவறு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.