குளிரூட்டும் சாதனத்தில் கோளாறு : 700,000 கார்களை மீளப் பெறும் BMW நிறுவனம்.

சீனாவில் ஏறக்குறைய 700,000 கார்களை பிஎம்டபிள்யூ  நிறுவனம் மீளப்பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

உள்ளூரிலிருந்து 499,539 கார்களும் 2025 மார்ச் மாதம் 1ஆம் திகதியிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 188,371 கார்களும் மீளப் பெற்றுக்கொள்ளப்படுமென பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை மாநில சந்தை ஓழுங்குமுறை நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்றுஉறுதிப்படுத்தியது.

குளிரூட்டும் சாதனத்தில் கோளாறு இருப்பதாலேயே அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சில கார்களில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டும் சாதனங்களில் கோளாறுகள் காணப்படுவதனால், இது துருப்பிடித்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ‘3 சீரிஸ்’, ‘5 சீரிஸ்மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பலஎக்ஸ் சீரிஸ்உள்ளிட்ட கார்களே இவ்வாறு மீளப்பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன.

எவ்வாறெனினும் இந்த நடவடிக்கையால் சீனாவில் கார் விநியோகம் குறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.