நீங்கள் செய்தது பெரும் தவறு : நெதன்யாகுவிடமிருந்து ஹெஸ்பொல்லாவுக்கு கடுமையான X செய்தி…

ஹெஸ்பொல்லா , இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட வீட்டுக்கு ட்ரோன் தாக்குதல் நடத்திய பின், “இஸ்ரேல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

“இன்று என்னையும் என் மனைவியையும் கொல்ல ஈரானிய ஆதரவு ஹெஸ்புல்லா செய்த முயற்சி ஒரு பெரும் தவறு” என நெதன்யாகு X இல் ஒரு இடுகையில் கூறினார்.

அந்த செய்தியில் நெதன்யாகு ;

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இன்று என்னையும் என் மனைவியையும் கொல்ல முற்பட்டது மிகப்பெரிய தவறு.

இது என்னையும் இஸ்ரேல் அரசையும் , எமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளுக்கு எதிரான எமது நியாயமான போரைத் தொடர்வதைத் தடுக்காது.

நான் ஈரானுக்கும் அதன் தீய சக்தியாக உள்ள அதன் பிரதிநிதிகளுக்கும் சொல்கிறேன்.

இஸ்ரேல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளையும் , அவர்களின் தலைவர்களையும் ஒழிப்போம்.

எங்கள் பணயக்கைதிகளை காஸாவிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவோம்.

மேலும் நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு அனுப்புவோம்.

இஸ்ரேலில் உள்ள நாங்கள் , எங்கள் அனைத்து போர் இலக்குகளையும் அடைவதற்கும், எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி , எதிர்கால தலைமுறைகள் வாழ்வதை யதார்த்தமாக்குவதற்கு உறுதியாக இருக்கிறோம்.

இறைவனின் துணையுடன் இணைந்து போராடுவோம்.
ஒன்றுபட்டு வெல்வோம்.

இஸ்ரேலிய பிரதமர் , செசரியா மற்றும் ஜெருசலேமில் இரண்டு தனியார் குடியிருப்புகளைப் பயன்படுத்துகிறார்.

நேற்றைய தாக்குதலின் போது , தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஜெருசலேமில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான Beit Aghion இல் அவர் நேரத்தை செலவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லாதான் காரணம் என ஈரான் கூறியதாக , ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

“தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நடத்தியது” என ஈரான் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஹிஸ்புல்லா இந்த அறிக்கைகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.