இந்தியப் பெருங்கடலில் ஈரானின் ராணுவப் பயிற்சி.
இந்திய பெருங்கடலில் ஈரான் இன்று கடற்படை பயிற்சியை தொடங்கியது. ரஷ்யா, ஓமன் ஆகிய நாடுகளும் இதில் இணைந்துள்ளன.
பிராந்தியத்தில் ஒன்பது நாடுகள் தற்போது இராணுவப் பயிற்சியை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த இராணுவ பயிற்சிக்கு “IMEX 2024” என பெயரிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த கூட்டுத் தலையீடு என்பதே அதன் விருப்பம் என தெரிவித்துள்ளது.
இது பலதரப்பு ஒத்துழைப்பின் கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், நாடுகளுக்கிடையிலான நல்லுறவு, நட்புறவு, பிராந்திய அமைதி மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு அரச ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த இராணுவ பயிற்சியில் சர்வதேச கடல் வர்த்தகம் மற்றும் கப்பல் பாதைகளின் பாதுகாப்பு, கடலில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் அடங்கும்.
இப்பகுதியில் போர் தீவிரமடைந்து, ஈரான் ஆதரவுடன் யேமனில் ஹூதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, செங்கடலைச் சுற்றி வரும் வணிகக் கப்பல்களுக்கான தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் தனது இராணுவ உறவுகளை வளர்க்க ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஓமன் கடற்பகுதியில் ஐந்தாவது கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தியது.
சவுதி அரேபியா, கத்தார், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் ஈரான் ராணுவ பயிற்சியை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.