ஏஐ தொழில்நுட்பத்தால் காப்பாற்றப்பட்ட 60 யானைகள்
ஏஐ தொழில்நுட்பத்தால் 60 யானைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.
அசாம், கவுஹாத்தியில் இருந்து லும்டிங் நகருக்கு கம்ரூப் விரைவு ரயில் சென்றது. அப்போது, ஹவாய்புர் மற்றும் லம்சக்ஹங் ரயில்நிலையம் அருகே யானைக் கூட்டங்கள் தண்டவாளத்தை கடந்து சென்றன.
இதனை முன்னரே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் செயல்படும் IDS எனப்படும் குறுக்கீட்டை கண்காணிக்கும் திட்டம் கணித்துள்ளது. உடனே, இந்த திட்டத்தின் மூலம் ரயில் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயிலை துரிதமாக நிறுத்திய ஓட்டுநர்கள், சுமார் 60 யானைகளின் உயிரை காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் கோயம்புத்தூர் அடுத்த மதுக்கரையிலும் பொருத்தப்பட்டு இருப்பதாக வனத்துறையின் முன்னாள் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இதனை ஆபத்தான இடங்களில் பொருத்தினால், வன விலங்குகளின் உயிரிழப்புகள் பெரும் அளவில் தவிர்க்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.