பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவி ஹரிணிக்கே -விஜித ஹேரத் தெரிவிப்பு!

பொதுத் தேர்தலின் பின்னரும் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பார் என அமைச்சர் விஜித ஹேரத் நேற்றைய தினம் (20.10) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் நிறைய விஷயங்கள் மாறிவருகின்றன. நாங்கள் ஏற்கனவே கூறியது போல புதிய அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக நியமனம் பெறுவார்கள். 25 பேர் கொண்ட அமைச்சரவையைக் கொண்டு நாம் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளலாம்.
அந்த அமைச்சரவையின் பிரதமராக இப்போது போல ஹரினி அமரசூரியவே இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.