ஓட்டோ சாரதியிடமிருந்து ஓட்டோவும், பணமும் அபகரிப்பு.
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓட்டோ சாரதி ஒருவரிடம் இருந்து ஓட்டோவும், 25 ஆயிரம் ரூபா பணமும் அபகரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சாரதி பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்களாக மூவர் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவர் தப்பிச் சென்ற நிலையில், முள்ளியவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.