10 லீற்றர் கசிப்புடன் யாழில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு அம்மன் கோயிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனை இடம்பெறுகின்றது எனப் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றது.
இந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 10 லீற்றர் கசிப்பை மீட்டதுடன், அதனை விற்பனைக்கு வைத்திருந்த நபரையும் கைது செய்தனர்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரைக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.