அனலைதீவைச் சேர்ந்த இருவர் மஞ்சள் கடத்தல். கடற்படையால் கைது.

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.
அத்தோடு மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றார்கள்