ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்? ரகசியத் தகவல் கசிந்தது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் வகுத்திருந்த திட்டம் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.
அது குறித்து அமெரிக்கா புலனாய்வு செய்கிறது.
மிகவும் ரகசியமானவை என்று வகைப்படுத்தப்பட்ட அந்த ஆவணங்கள் Telegram செயலியில் பகிரப்பட்டன.
ஈரானுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் அதன் வளங்களைத் திரட்டி வருவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மாதம் முதல்தேதி ஈரான் 200க்கும் அதிகமான புவியீர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் பாய்ச்சியது.
ஹமாஸ், ஹிஸ்புல்லாத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் அந்தத் தாக்குதலை நடத்தியது.
அது மாபெரும் தவறு அந்தத் தாக்குதலுக்காக ஈரானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) கூறியிருந்தார்.