ஹிஸ்புல்லாவின் நிதிப் பிரிவுத் தலைவர் மரணம்.

ஹிஸ்புல்லாவின் நிதிப் பிரிவுத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதி கிடைப்பதற்குப் பொறுப்பு வகித்த அவர் சிரியாவில் இன்று காலை கொல்லப்பட்டதாக தெரிவித்த இஸ்ரேல் , மாண்டவரின் பெயரை வெளியிடவில்லை.
அவர் ஈரானின் எண்ணெய் விற்பனை மூலம், ஹிஸ்புல்லாவுக்குப் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.