கண்டி பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்கள் மீட்பு! – அடையாளம் காணப்படவில்லை.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராதனை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.