அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்கமாட்டோம் ஜனாதிபதி அநுரவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று காட்டுங்கள் என்று முன்னாள் எம்.பி. உதய கம்மன்பிலவுக்குச் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.
அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையைத் தாம் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் குழப்புவதற்காகவே ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்களை உதய கம்மன்பில குழுவினர் குறிவைத்துள்ளனர் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.