ஒடிசாவில் 288 மீட்புக் குழுக்கள்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை ‘டானா’ புயலாக வலுப்பெற்றதால், ஒடிசா கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.

மேலும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு – தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு – தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

எனவே மாநில அரசு ஏற்கனவே 19 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள், 51 ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப்படை குழுக்கள் மற்றும் 178 தீயணைப்பு சேவைக் குழுக்களுடன், கூடுதலாக 40 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.