அருகம்பே பகுதியில் வைத்து இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை தாக்க திட்டம்.. பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது :பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ

அறுகம்பே பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அந்த பகுதிகளில் உல்லாச துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அறுகம்பே பகுதிக்கு பெரும்பாலும் இஸ்ரேலியர்கள் பொழுதுபோக்கிற்காக வருவதாகவும், அவர்களுக்காக அப்பகுதியில் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.