சுயேச்சைக் குழுக்களை நிராகரித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்- சட்டத்தரணி செல்வராசா டினேசன்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவிலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளதால்,தமிழ்ப் பிரதிநித்துவத்துக்கான ஆசனங்கள் குறைக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள் சிந்தித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வராசா டினேசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (23.10),புதன்கிழமை, பேசாலை, மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தங்களது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என்று வாக்களிப்பதற்கு இது உள்ளூராட்சித் தேர்தல் அல்ல. இது பாராளுமன்றத் தேர்தல்,மக்கள் சிந்தித்துச் செயலாற்றும் நேரமிது. எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே தங்கள் வாக்கினை வழங்க வேண்டும்.சயேச்சைச் குழுக்கள் மாரிகாலத் தவளைகள் போன்றவர்கள் எனவே அவர்களை நிராகரித்து ஓரணியில் திரண்டு, தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டுமென்றார்.