BRICS கூட்டத்துக்கு இடையே இந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) இன்று (23 அக்டோபர்) சந்திக்கவிருக்கின்றனர்.
இரு தலைவர்களும் தற்போது ரஷ்யாவில் இருக்கின்றனர்.
ரஷ்யாவின் கஸான் நகரில் BRICS நாடுகளின் உச்சநிலைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இமயமலை எல்லையில் 2020ஆம் ஆண்டு சிறுமோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் மாண்டனர்.
நாலாண்டாக இரு நாட்டுக்கும் இடையே கசப்பு நிலவியது.
அதை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக அவை கூறின.
அமெரிக்கா, கனடா ஆகியவற்றோடு இந்தியாவும் சீனாவும் முரண்பாடு கொண்டிருக்கும் நேரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு வருகிறது.
ரஷ்யாவில் நடைபெறும் BRICS கூட்டத்தில் 36 நாடுகளின் பேராளர்கள் கலந்துகொள்கின்றனர்.
மலேசியா, தாய்லந்து போன்ற சில நாடுகள் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சேர விரும்புகின்றன.