போரை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken), போர் தொடங்கக் காரணமான ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போரை நிறுத்தும்படி இஸ்ரேலிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

ஜெருசலத்தில் அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவைச் (Benjamin Netanyahu) சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பேசினார்.

காஸா, லெபனான் இரண்டிலுமே போரைக் கைவிடும்படி பிளிங்கன் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸா போர் தொடங்கிய பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் 11ஆவது மத்திய கிழக்குப் பயணம் இதுவாகும்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதற்குமுன் அவர் மேற்கொள்ளும் கடைசிப் பயணமும்.

நல்ல பலன்தரக்கூடிய, நட்பார்ந்த சந்திப்பு என நெட்டன்யாஹு சொன்னார் இதுவாகும்.

சின்வார் கொல்லப்பட்டது பிணையாளிகளை விடுவிப்பதில் உதவியாக அமையலாம் என அவர் குறிப்பிட்டார்.

பிளிங்கன் சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்குச் செல்கிறார். சண்டை நிறுத்தம் இன்னமும் சாத்தியமே என்று அவர் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.