அல்-சஹேல் ( Al-Sahel) மருத்துவமனை பதுங்கு குழியில் மில்லியன் கணக்கில் ரொக்கத்தையும் தங்கத்தையும் பதுக்கி வைத்துள்ளது ஹிஸ்புல்லா: இஸ்ரேல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள அல்-சஹேல் ( Al-Sahel) மருத்துவமனையில் பதுங்கு குழியில் ஹிஸ்புல்லா மில்லியன் கணக்கான ரொக்கத்தையும் தங்கத்தையும் பதுக்கி வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியிருக்கிறது.
ஹில்புல்லாவின் நிதி நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தாலும் அந்தப் பதுங்கு குழி இருக்கும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படாது என ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் மருத்துவமனை குறித்து இஸ்ரேல் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக அதன் இயக்குநரும் Shi’ite Amal இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஃபாடி அலமி (Fadi Alameh) Reuters செய்தியிடம் கூறினார்.
மருத்துவமனையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவதாக அவர் சொன்னார்.
அதன் தொடர்பில் இஸ்ரேலிய ராணுவத்திடமிருந்தும் ஹிஸ்புல்லா அமைப்பிடமிருந்தும் உடனடித் தகவல்களைப் பெற முடியவில்லை என்றும் Reuters கூறுகிறது.