யாழில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுகின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.