ஓட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு.

ஓட்டோவும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் அந்தரவெவ, கலயா மன்சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவைச் செலுத்தி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நொச்சியாகம, அடம்பனையைச் சேர்ந்த டி.சுமித் ரத்நாயக்க (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மகள், மகன் மற்றும் மகளின் நண்பரை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.