ரயிலுடன் மோதி இளைஞர் மரணம்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே ரயிலுடன் மோதி மரணமடைந்துள்ளார்.
மேற்படி இளைஞரின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.