திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!
திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.
திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வகத்தில் கடந்த இரு நாள்களாக வாயுக்கசிவு இருந்துள்ளது. மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
நேற்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் மாணவ, மாணவிகளுக்கு திடீரென கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், வாந்தி, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. வெந்நீர் குடிக்கும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் வந்து மாணவர்களை வெளியேற்றி அவர்களை தேரடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மாலை 4 மணி வரை பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.