வவுனியாவில் பல இடங்களில் முன்னணியினர் தீவிர பரப்புரை.
வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
வன்னித் தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் தவபாலன் தலைமையில் இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.
இதன்போது மக்கள் தமது தேவைகள் தொடர்பாகத் தெரியப்படுத்தியதுடன், தமிழ்த் தேசியத்தின் இருப்பு தொடர்பாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கூட்டங்களில் அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.