பாணந்துறையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத ஆணின் சடலம்.

களுத்துறை, பாணந்துறை கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 5 அங்குலம் உயரமுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்ட மேற்படி நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.