லோகானின் மனைவி வீட்டிலிருந்து அகப்பட்ட பதிவு செய்யப்படாத சொகுசு கார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மிரிஹான அமுதெனிய ஹால் பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் கேரேஜ் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரத்தியேக செயலாளரே இந்த காரை சில வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த காரின் சாவி இல்லாததால் வேறு வாகனம் ஒன்றில் மிரிஹான பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டது.