பருத்தித்துறையில் மேலும் கைக்குண்டுகள் மீட்பு!

பருத்தித்துறையில் இன்றும் (27) நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரால் மேலும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

போர் காரணமாகப் பாவனையின்றி காணப்பட்ட காணியொன்றின் கிணற்றில் இருந்தே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றைத் துப்பரவு செய்யும்போது இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

போர் காரணமாக 35 வருடங்களாகப் பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றை நேற்று (26) சனிக்கிழமை துப்பரவு செய்து கிணற்றில் இருந்த கழிவுகளை வெளிக்கொணர்ந்தபோது 11 வரையிலான கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

இதையடுத்து காணி உரிமையாளரால் பருத்தித்துறைப் பொலிஸாருக்குக் கிணற்றில் கைக்குண்டுகள் இருக்கின்றன என்று தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமையும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குறித்த கிணற்றில் இருந்து மேலும் இரண்டு கைக்குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.