ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு! – விஜய்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது.

மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, “நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற வருவோரை உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். கூட்டணிக்கு வருவோருக்கும் ஆட்சியில் பங்கீடு அளிக்கப்படும், அதிகாரப்பகிர்வை செயல்படுத்துவோம்” என்று விஜய் பேசியுள்ளார்.

முன்னதாக, ஜாதிவாரிப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மதச் சார்பின்மை, அனைவருக்கும் அனைத்தும் ஆகிய விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியுள்ளார் விஜய்.

Leave A Reply

Your email address will not be published.