சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டுடன் தேங்காய் எடுத்த செல்ல தடை?
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காயை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மண்டல, மகர விளக்குப் பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அந்த வகையில் இந்தாண்டு சபரிமலை மண்டல பூஜை நவம்பர் 16, சனிக்கிழமை தொடங்குகிறது.
டிசம்பர் 26, வியாழன் அன்று மண்டல பூஜை நிறைவு பெருகிறது. இந்த பூஜையில் ஐயப்பனின் யாத்திரையில் இருமுடி கட்டி யாத்திரை தொடங்கிச் சென்று 18 படி ஏறுதல் என்பது தான் முக்கியச் சடங்காகும்.ஆனால் இந்த தேங்காய்களை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இருமுடிக்குள் நெய், தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் சார்பில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தர்கள் இருமுடியை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காகப் பாதுகாப்பு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஐயப்ப பக்தர்களின் அனுமதிக்கும்போது வெடிபொருள் அடையாளம் காணும் கருவி மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் முடிவடையும் வரை அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி அமலில் இருக்கும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.