கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி!

கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா, சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தை நோக்கி கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த கார் திடீரென பஞ்சராகியுள்ளது. இதனால் எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனந்தபூரை சேர்ந்த சந்தோஷ், ஷண்முக், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா, வெங்கி ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,
இவர்கள் அனைவரும் தாடிபத்ரியில் இஸ்கான் அமைப்பில் நடந்த சங்கீர்த்தனை நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.