யானை தாக்கி மூதாட்டி சாவு!

காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி மூதாட்டி நேற்று தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.