கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகொலை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேகாலை கொஸ்பின்ன பகுதியில் உள்ள அவரது வீட்டில் கை கால்களை கட்டிலில் கட்டி வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
எழுபத்தைந்து வயதுடைய அவரது சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவியின் வாயைக் கட்டிவிட்டு தாக்கியுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
அவர்களின் திருடப்பட்ட கார் , சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.