சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று முதல் பலத்த பாதுகாப்பு.

யாழ். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்குத் தாக்குதல் நடத்தப்படப் போவதாகப் பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடும் சோதனைகளுக்குப் பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேவேளை, கடந்த வாரம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட போவதாகப் பதிவுத் தபாலில் பொலிஸாருக்குத் தகவல் வந்ததையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.