காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் சாவு!

வவுனியா, செட்டிகுளம் – கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் காட்டுக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஸ்வரன் கேதீஸ்வரன் என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.