கேரள முதல்வரின் கார் உள்ளிட்ட 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து.

திருவனந்தபுரம் சாலையில் ‘ஸ்கூட்டி’ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் முதல்வர் சென்ற கார், ஐந்து பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியன சேதமடைந்தன.

திருவனந்தபுரத்தின் எம்சி சாலையில் இருந்து அட்டிங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென்று நடுரோட்டில் பிரேக் பிடித்து வலதுபுறம் திரும்ப முயன்றார்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனம், அந்தப் பெண் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

அதனால், அந்த வாகனத்தைத் தொடர்ந்து வந்த மற்ற பாதுகாப்பு வாகனங்கள், முதல்வரின் கார் மற்றும் ஆம்புலன்ஸ் என வரிசையாக அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

ஆயினும், இந்த விபத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.