விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்ட சீனாவின் மூன்று பேர் கொண்ட குழு.
தியேன்கோங் விண்வெளி நிலையத்துக்குச் சீனாவின் மூன்று பேரைக் கொண்ட விண்வெளியாளர் குழு அக்டோபர் 30ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளியாளர்களை அனுப்பிவைத்து அங்கு ஒரு தளத்தை அமைக்க சீனா இலக்கு கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்த இந்த மூன்று பேரும் விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள செயற்கைக் கோள் பாய்ச்சும் நிலையத்திலிருந்து ஷென்சோ-19 விண்கலம் மூலம் அந்த மூன்று விண்வெளியாளர்களும் புறப்பட்டதாகச் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.
அந்த மூன்று விண்வெளியாளர்களில் சீனாவின் ஒரே ஒரு பெண் வின்வெளிப் பொறுயாளரான 34 வயது லெஃப்டினெண்ட் – கர்னல் வாக் ஹாவ்சியும் ஒருவர்.
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட மூன்றாவது சீனப் பெண் எனும் பெருமை இவரைச் சேரும்.